ஒரு குழுவிற்கு நான்கு போட்டியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு அல்லது மூன்று பாடசலைகள் ஒன்றாக போட்டியிடும்.
ஒரு மாகாணத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட பாடசாலைகள் இருக்கும் பட்சத்தில் மாகாணத்தின் வெற்றியாளரை தெரிவு செய்வதற்காக முதல் தொகுதியின் வெற்றியாளர்களிடையே மீண்டும் ஒரு போட்டி நடைபெறும்.
பதிலளிக்கும்போது தெளிவாகவும், சத்தமாகவும் பதிலளிக்க வேண்டும்.
பதிலளிக்கும் போது முழுமையான பதிலை அளிப்பது கட்டாயமானது. முழுமையற்ற பதில்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது.
உதாரணம் : இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் நபரின் முழுப்பெயரை குறிப்பிடுக?இந்த போட்டி 3 சுற்றுக்களை உள்ளடக்கியது.
முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றுக்களில் போட்டியாளர்களிடம் தனித்தனியாக கேள்விகள் கேட்கப்படும். மூன்றாவது சுற்றில் குழுவிடம் கேள்விகள் கேட்கப்படும்.
அனைத்து விடயங்கள் தொடர்பான இறுதி முடிவு, நடுவர்களால் தீர்மானிக்கப்படும்
குழுவிடம் கலந்தாலோசிக்காமல் ஒவ்வொரு போட்டியாளரும் தனித்தனியே பதிலளிக்க வேண்டும். இந்த நிபந்தனை மீறப்படுமிடத்து குழுவிடமிருந்து 10 புள்ளிகள் கழிக்கப்படும்.
ஓவ்வொரு சுற்றிலும் ஒவ்வொறுரு போட்டியாளரிடமிருந்தும் ஒரு கேள்வி வீதம் கேட்கப்படும். பதிலளிப்பதற்கு 15 செக்கன்கள் வழங்கப்படும். சரியான பதிலுக்கு 10 புள்ளிகள் வழங்கப்படும்.
வழங்கப்படும் நேரத்திற்குள் குறிப்பிட்ட போட்டியாளரினால் பதிலளிக்க முடியாமல் போகுமிடத்து, நேரம் முடிவடைந்துவிட்டது என அறிவிக்கப்பட்ட பின்னர், அதே குழுவின் யாதேனுமொரு போட்டியாளருக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும். அவருக்கு பதிலளிப்பதற்கு 5 செக்கன்கள் வழங்கப்படும். சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.
இந்த வாய்ப்பு முதலில் பதிலளிக்க முன்வரும் போட்டியாளருக்கே வழங்கப்படும்.
ஒரு போட்டியாளர் தனக்கு வழங்கப்படும் நேரத்திற்குள் ஒரு முறை மட்டுமே முயற்சி செய்;ய முடியும்.
சரியான பதில் வழங்கப்படாதவிடத்து, வேறோரு குழுவிற்கு பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.
குழுவாக கலந்தாலோசித்த பின்பு சரியான பதிலை வழங்கலாம்.
ஓவ்வொரு குழுவிற்கும் 10 செக்கன்கள் வழங்கப்படும். சரியான பதிலுக்கு 10 புள்ளிகள் வழங்கப்படும். ஒவ்வெரு பிழையான பதிலுக்கும் 05 புள்ளிகள் கழிக்கப்படும்.
குறிப்பிட்ட குழுவினால் பதிலளிக்க முடியாமல் போகுமிடத்து, இன்னுமொரு குழுவிற்கு பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.
இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் சமநிலையில் இருக்கும் பட்சத்தில், குழுவின் தலைவரிடம் கேள்வி கேட்கப்படும். அதற்கு பின்பும் அணிகள் சமநிலையில் இருந்தால் அதிகபட்சம் 03 தடவைகள் வரை அணியின் தலைவரிடம் கேள்வி கேட்கப்படும். இங்கு ஒரு அணியின் தலைவர் பதிலளிக்க தவறும் பட்சத்தில் அதே கேள்வி எதிரணியின் தலைவரிடம் கேட்கப்பட மாட்டாது.
அதற்குப் பின்பும் அணிகள் சமநிலையில் இருப்பின் நாணயசுழற்சி மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்.